செய்திகள்
இடமாற்றம்

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர்கள் உள்பட 33 பேர் இடமாற்றம்

Published On 2019-10-17 15:23 GMT   |   Update On 2019-10-17 15:23 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 33 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முதல் ஐ.ஜி. வரையிலான போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோல சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளையும் மாற்ற உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய 33 இன்ஸ்பெக்டர்கள் முதற்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் கற்பகம், சரவணன் ரவி ஆகியோர் கோவை மாநகருக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல கோவை நகரில் பணியாற்றிய சாந்தி, திருப்பூர் நகரில் பணியாற்றிய சந்திரமோகன் ஆகியோர் சேலம் சரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய 28 இன்ஸ்பெக்டர்களும், ஆயுதப்படையில் பணியாற்றிய 5 இன்ஸ்பெக்டர்களும் கோவை மண்டலத்தில் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News