செய்திகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-09-30 18:28 GMT   |   Update On 2019-09-30 18:28 GMT
நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தரகம்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் நடந்தது
கரூர்:

கரூர் மாவட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தரகம்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் நடந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச் சூழலை பேணி காப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து தரகம்பட்டி கடைவீதிகளில், அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பை, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் சுற்றுபுறசூழலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும், டீ-காபி உள்ளிட்ட சூடான திரவத்தினை பாலித்தீன் பையில் ஊற்றி கொண்டு வந்து அதனை குடிப்பதன் மூலம் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துரைத்து பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் துணிப்பை எடுத்துவர அறிவுறுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படடது.

இந்த நிகழ்ச்சியில் ஊர் நாட்டமை பெரியசாமி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு கலந்து கொண்டு பேசினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலத்திட்ட முகாம் அலுவலர்கள் சக்திவேல்,சேகர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மேகலை நன்றி கூறினார்.
Tags:    

Similar News