செய்திகள்
கைது

ஆரணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2019-09-27 10:34 GMT   |   Update On 2019-09-27 10:34 GMT
ஆரணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தன.

டி.எஸ்.பி செந்தில் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் தனிபடை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆரணி அவுசிங்போர்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 2வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் வேலூர் டவுன் சத்துவாச்சாரியை சேர்ந்த சத்தியா (சத்யராஜ்) கஸ்பா பகுதியை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 வாலிபாகளிடம் விசாரணை மேற்கொண்ட போது ஆரணி அடுத்த குன்னத்துர் கிராமத்தில் திருமண நிகழச்சிக்கு சென்றவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை ஆரணி பெரியகடை வீதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகை மற்றும் 2 பைக்கை ஆரணி நகர போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News