செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்த காட்சி.

கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

Published On 2019-09-17 16:10 GMT   |   Update On 2019-09-17 16:10 GMT
கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சிகளின் செயல் அலுவலர் ஜி.நாகராஜ் அறிவுறுத்தலின்பேரில், இளநிலை உதவியாளர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வை நாகேந்திரகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். மளிகை கடைகள், உணவகங்கள், காய்கறிகள், பூக்கள் என பலதரப்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பிளாஸ்டிக் பயன்படுத்திய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை உபயோகித்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
Tags:    

Similar News