செய்திகள்
புகழேந்தி

பதவியில் இருந்து என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை - புகழேந்தி

Published On 2019-09-16 08:59 GMT   |   Update On 2019-09-16 11:07 GMT
செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று புகழேந்தி கூறியுள்ளார்.

தர்மபுரி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் பட்டியலை இன்று தினகரன் வெளியிட்டார். அதில் பெங்களூரு புகழேந்தி பெயர் இடம்பெறவில்லை.

சமீப காலமாக தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகழேந்தி வேறு கட்சிக்கு செல்ல நினைத்து தினகரனை தாக்கி பேசிவருவதாக வெற்றிவேல் கூறி இருந்தார்.

வீடியோ வெளியானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் அறிவித்து இருந்தார். வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என்று ஏற்கனவே புகழேந்தி கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தி பெயர் இல்லை.

 


இதுகுறித்து புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அம்மா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தபோது சசிகலா ஒப்புதல் பெற்று என்னை செய்தி தொடர்பாளராக நியமித்தார்கள்.

அப்போது முன்னாள் எம்.பி. ரபி பெர்னாட்டையும் செய்தி தொடர்பாளராக நியமிப்பதாக இருந்தது. ஆனால் அவர் வேண்டாம் என்று கூறியதால் என்னை செய்தி தொடர்பாளராக நியமித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

என்னை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிப்பதற்கு தினகரனுக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News