செய்திகள்
கைது

வில்லிவாக்கத்தில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கைது

Published On 2019-09-13 10:49 GMT   |   Update On 2019-09-13 10:49 GMT
சென்னை வில்லிவாக்கத்தில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்:

வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிவதாக கூறினார். தாய், தந்தை இல்லாததால் தனியாக வசிப்பதாகவும் சொல்லி வந்தார்.

இதை உண்மை என்று நம்பி, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஒருவர் தனது பட்டதாரி மகளை திருமணம் செய்து வைக்க முன் வந்தார்.

அவர்களிடம் கார்த்திக் மிகவும் அன்பாக பழகினார். தினமும் ஆஸ்பத்திரிக்கு போவதாக கூறி காரில் சென்று வந்துள்ளார். இதையடுத்து அவருடன், அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று முன்தினம் கார்த்திக் அந்த பெண்ணை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். நேற்று ரெட்டேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில், கார்த்திக் டாக்டருக்கு படிக்கவில்லை. இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார் என்று போன் மூலம் மாதவரம் போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து, போலீசார் திருமண மண்டபம் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கார்த்திக் டாக்டர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. போரூர் மருத்துவ கல்லூரியில் 3 வருடங்கள் மட்டுமே படித்தார். கோவையை சேர்ந்த இவர் டாக்டர் படிப்பை முடித்ததாக கூறி இளம்பெண்ணை மணந்தார். அந்த குடும்பத்தினரிடம் ரூ.12 லட்சம் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பெண் வீட்டாரும் புகார் செய்தனர். அதைதொடர்ந்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கார்த்திக்கை மாதவரம் போலீசார் கைது செய்தனர். இது போல் வேறு எங்கும் கார்த்திக் மோசடி செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News