செய்திகள்
வெள்ளை அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம்- மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சரின் பதில்
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.
சென்னை:
இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், அதிமுக ஆட்சியில் இதற்கு முன்பு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கையுடன் பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட தருவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக கூறி உள்ளார்.
மேலும், தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது என்றும், முதலீடு விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது எனறும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.