செய்திகள்
மஞ்சூர் அருகே சுற்றித்திரியும் கடமானை படத்தில் காணலாம்.

மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கடமான்

Published On 2019-09-09 17:55 GMT   |   Update On 2019-09-09 17:55 GMT
மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் கடமான் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் எவ்வித அச்சமும் இன்றி உலா வருகிறது.
மஞ்சூர்:

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு காட்டு யானைகள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் காய்கறிகள் சேதமடைவதால் விவசாயிகளுக்கு ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமான் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் எவ்வித அச்சமும் இன்றி உலா வருகிறது. இந்த பகுதியில் உள்ள புற்களை மேயும் இந்த கடமான், இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. தனியாக சுற்றித்திரியும் இந்த கடமானை அந்த பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. ஆனால் மனிதர்களை கண்டால் இந்த வன விலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் சமீபகாலமாக கடமான் ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. பொதுமக்களை கண்டாலும் அங்கிருந்து நகர்வது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News