செய்திகள்
ரெயில்வே ஐ.ஜி.வனிதா மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த காட்சி

ரெயில் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட 257 பவுன் நகை-செல்போன்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

Published On 2019-08-28 09:20 GMT   |   Update On 2019-08-28 09:20 GMT
ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளையடித்த 257 பவுன் நகைகள் மற்றும் 336 செல்போன்கள் உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.
சென்னை:

கடந்த 2018-2019-ம் ஆண்டுகளில் சென்னை மற்றும் திருச்சி ரெயில்வே போலீசார் 257 பவுன் தங்க நகைகளையும், 336 செல்போன்களையும் கொள்ளையர்களிடமிருந்து மீட்டனர்.

எழும்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரெயில்வே ஐ.ஜி. வனிதா மீட்கப்பட்ட நகை மற்றும் செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.

சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், திருச்சி சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சந்தோஷ் என். சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரபல ரெயில் கொள்ளையன் சாகுல் அமீது மற்றும் மயக்க மருந்து கொடுத்து கைவரிசை காட்டும் கொள்ளையன் சுபாங்கூர் சக்கரவர்த்தி உள்பட 156 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகள், தங்களது பாதுகாப்புக்காக 1512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், 99625 00500, 94981 01950 என்ற எண்களில் வாட்ஸ் -அப்பில் புகார் செய்யலாம் என்றும் ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News