செய்திகள்
கலெக்டர் ஆனந்த்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-08-27 16:10 GMT   |   Update On 2019-08-27 16:10 GMT
குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
திருவாரூர்:

தமிழக சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிராமம் வாரியாக வருகிற 31-ந் தேதி வரை முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் துணை தாசில்தார் நிலையிலான அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு மனுக்களை பெற உள்ளனர்.

எனவே பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா மாற்றம் அனைத்து வகையான ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுக்களை தங்கள் கிராமத்திற்கு வருகை தரும் மேற்கண்ட அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம்.

இவ்்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News