செய்திகள்
முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் ராமநதி அணை.

கடையம் ராமநதி அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-08-24 08:12 GMT   |   Update On 2019-08-24 08:12 GMT
நெல்லை மாவட்டம் கடையம் ராமநதி அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது.

மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை 83.5 அடி நீர்மட்டத்திலேயே நிலை நிறுத்தி, வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தென்கால் மற்றும் வடகாலுக்கு தலா வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துணை ஆட்சியர் நடேசன் அணை பாதுகாப்பு ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அம்பை தாசில்தார் வெங்கடேஷ், ராமநதி அணை உதவி பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மழை மற்றும் அணையின் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மாறுபடும். எனவே ஆற்றின் கரையோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடையம் ராமநதி அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News