செய்திகள்
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள்- போலீஸ் மறுப்பு

Published On 2019-08-23 07:21 GMT   |   Update On 2019-08-24 04:39 GMT
கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை:

இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கோவை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள், அவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இவற்றை அடையாளமாகக் கொண்டு பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என காவல்துறை மறுத்துள்ளது.
Tags:    

Similar News