செய்திகள்
கோப்புப்படம்

கோவைப்புதூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

Published On 2019-08-22 05:20 GMT   |   Update On 2019-08-22 05:20 GMT
கோவைப்புதூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவைப்புதூர் டாக்சி கலெக்சன் ரோட்டை சேர்ந்தவர் காந்தி (வயது 72). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டு வளாகத்தில் 20 வயது மதிக்கத்தக்க சந்தன மரத்தை வைத்து வளர்த்து வந்தார்.

நேற்று இரவு காந்தி வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டினர். பின்னர் 5½ அடி உயரமுள்ள துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

நள்ளிரவு வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து வெளியே வந்த காந்தி சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News