செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-08-16 09:26 GMT   |   Update On 2019-08-16 09:26 GMT
ஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு மாணவர்கள் கையில் கயிறு கட்ட தடை விதித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ராயபுரம்:

ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது மானவர்களுக்கு அவர் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராயபுரம் ஒரு சிறிய தொகுதி தான். ஆனால் இங்கு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பல்வேறு விளையாட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

20 வருடமாக முப்படைகளுக்குள் போதுமான ஒற்றுமை இல்லாததால் இதனை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்ல வி‌ஷயம். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

2010-ல் தி.மு.க., காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வர எடுத்த முயற்சியால் தான் இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளது. பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை. மெய் சொல்லும் நாங்கள் கெட்டுப்போவதும் இல்லை.



நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தற்கான காரணத்தை விளக்கிய பின்னரே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு, மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News