செய்திகள்
மதுரை ரெயில் நிலையம்

கனமழை காரணமாக மதுரை ரெயில்கள் தாமதம்

Published On 2019-08-10 08:23 GMT   |   Update On 2019-08-10 08:23 GMT
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரைக்கு ரெயில்கள் தாமதமாக வருகின்றன.
மதுரை:

கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை மதுரை வந்த அனைத்து ரெயில்களும் தாமதமாகவே வந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பாளர் வீராசுவாமியிடம் கேட்டபோது, “திருவனந்தபுரம், சேலம் ஆகிய 2 ரெயில்வே கோட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் சேலம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

எனவே அதில் ஒருசில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரை கோட்டம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் இருந்து மதுரை வரும் ரெயில்கள் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News