செய்திகள்
தங்க நகை திருட்டு மாதிரிபடம்

ஓய்வு பெற்ற வன அதிகாரி வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2019-08-05 18:20 GMT   |   Update On 2019-08-05 18:20 GMT
தஞ்சை அருகே ஓய்வு பெற்ற வன அதிகாரி வீட்டில் 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாலியமங்கலம்:

தஞ்சை அருகே உள்ள புத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது67). இவர் ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திருவளங்காடு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிந்த 18 பவுன் நகைகளை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News