செய்திகள்
போராட்டம்

சம்பளம் வழங்க கோரி 27-வது நாளாக பாசிக் ஊழியர்கள் தர்ணா

Published On 2019-07-23 15:05 GMT   |   Update On 2019-07-23 15:05 GMT
புதுவை பாசிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி 27-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை பாசிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். 55 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.

தினக்கூலிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேளாண்துறை இயக்குனரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டத்தினை தொடக்கி உள்ளனர்.

தர்ணா, கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 27-வது நாளாக பாசிக் தலைமை அலுவலத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுசெயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பாசிக் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 55 மாத சம்பளத்தை வழங்க கோரி கோ‌ஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News