செய்திகள்
அத்தி வரதர்

அத்தி வரதர் வைபவம்- விரைவு தரிசன டிக்கெட்டுகள் 2000 ஆக உயர்வு

Published On 2019-07-23 10:00 GMT   |   Update On 2019-07-23 10:03 GMT
அத்தி வரதர் வைபத்தில் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் வைபவத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அத்திவரதரை வழிபடுகின்றனர். 

விரைவு தரிசனத்திற்காக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அது சமீபத்தில் 1000 ஆக உயர்த்தப்பட்டது.



இந்நிலையில், விரைவு தரிசன டிக்கெட்டுகளை 2000 ஆக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அறிவித்துள்ளார். அறநிலையத் துறை இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இனி ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை தினமும் 2 ஆயிரம் பேர் தரிசிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தி வரதரை தரிசிக்கலாம். 
Tags:    

Similar News