செய்திகள்
ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்கிறது- சட்டசபையில் புதிய வரி விதிப்பு மசோதா தாக்கல்

Published On 2019-07-18 08:03 GMT   |   Update On 2019-07-18 08:03 GMT
படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளின் இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கு புதிய வரி விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்தார். படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிய வரிகளை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. 

அதாவது, இந்த மசோதா அமலுக்கு வந்தால், படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளில் உள்ள இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயும், படுக்கைக்கு மாதம் 2500 ரூபாயும் வரி விதிக்கப்படும். 

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த வரியை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும். இந்த வரியை செலுத்துவதற்கான நடைமுறைகளும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமான அளவில் உயர வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News