செய்திகள்

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை

Published On 2019-06-22 06:40 GMT   |   Update On 2019-06-22 06:40 GMT
தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பதாக செய்திகள் பரவி வந்தன. 

இந்நிலையில்,  தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 



அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- சில பள்ளிகள் தண்ணீர் பிரச்சினை காரணமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகிறது. இது விதிகளுக்கு முரணானது. 

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News