செய்திகள்

ரெயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடையா? வைரமுத்து கண்டனம்

Published On 2019-06-14 08:40 GMT   |   Update On 2019-06-14 08:40 GMT
தென்னக ரெயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம்  என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தென்னக ரெயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.



இந்நிலையில், தென்னக ரெயில்வேயின் உத்தரவிற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது: ”இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News