செய்திகள்

பெரம்பலூர் நகராட்சிக்கு 20 குப்பை சேகரிப்பு தொட்டிகள்

Published On 2019-06-09 18:00 GMT   |   Update On 2019-06-09 18:00 GMT
வார்டுகளிலும் முக்கிய தெருக்களில் குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்காக 20 குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் அகில இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் (பில்டர்ஸ்) மாவட்ட மையம் சார்பில் நகரில் உள்ள 20 வார்டுகளிலும் முக்கிய தெருக்களில் குப்பைகளை சேகரித்துஅகற்றுவதற்காகவும்,சுற்றுச்சூழலை சுகாதாரமாகபேணிக்காத்திடும்வகையிலும் பொதுநலமுயற்சியாக பிளாஸ்டிக்டிரம்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு கட்டுனர்கள் சங்கத்தின்மாவட்ட தலைவரும், பெரம்பலூர் சுப்ரீம்அரிமா சங்கத்தின்சாசனத்தலைவருமானபொறியாளர் ராஜாராம்தலைமை தாங்கி, 20 பிளாஸ்டிக் டிரம்களை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்றதலைவர் இளையராஜா,கட்டுனர்கள்சங்கத்தின் பொறுப்பாளர் இமயவரம்பன்,நகராட்சி சுகாதாரஆய்வாளர் கணேசன்,கட்டுனர்கள்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள்,துப்புறவு பணியாளர்கள்கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News