செய்திகள்

தமிழக அரசின் நலத்திட்டங்களின் நிதியுதவி பெற வருமான வரம்பு அதிகரிப்பு

Published On 2019-06-01 08:24 GMT   |   Update On 2019-06-01 09:03 GMT
தமிழக அரசின் ஏழை, விதவை குழந்தைகளுக்கு பாடநூல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழக அரசின் திருமண நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது. இதேபோல், ஏழை, விதவை குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடு வழங்கும் திட்டத்துக்கும் 24 ஆயிரம் ரூபாயாக வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல், மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டத்துக்கும் வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News