செய்திகள்

அ.ம.மு.க. பிரமுகரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-05-18 10:45 GMT   |   Update On 2019-05-18 10:45 GMT
மதுரையில் அ.ம.மு.க. பிரமுகரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை சிலைமானில் உள்ள சங்கையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது32). இவர் அந்த பகுதியின் அ.ம.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.

பாண்டியராஜன் தனது உறவினர்களான கர்ணன் என்பவருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது புளியங்குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் (32) தலைமையில் 4 பேர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் பாண்டியராஜனுக்கும், கர்ணனுக்கும் சரமாரி இரும்பு கம்பி அடி மற்றும் கத்திக்குத்து விழுந்தது.

இது தொடர்பாக பாண்டியராஜன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News