செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்

உத்தமபாளையத்தில் நீதிமன்றம் அருகே அதிகாரி வீட்டில் கொள்ளை

Published On 2019-05-14 09:54 GMT   |   Update On 2019-05-14 09:54 GMT
உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே வசித்து வருபவர் முத்தையா (வயது65). இவர் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் மறறும் எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடி சென்றனர். இன்று காலை ஊருக்கு திரும்பிய முத்தையா தனது வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வீரபாண்டி தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

உத்தமபாளையம் சப் டிவிசனுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. சுருளி கோவிலில் கொள்ளையடிக்க வந்த கும்பல் பூசாரியை கொலை செய்தனர். அணைப்பட்டி கோவிலில் உண்டியல் பணம் திருடப்பட்டது. ராயப்பன்பட்டியில் 2 வீடுகளில் கொள்ளை நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். குறிப்பாக பூட்டி இருக்கும் வீடுகளையும் கோவில்களையும் குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News