செய்திகள்

ஆட்டோவில் ஜிபிஎஸ் கருவியுடன் மீட்டரை பொருத்த கோரி வழக்கு - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-04-29 09:36 GMT   |   Update On 2019-04-29 11:24 GMT
ஆட்டோவில் ஜிபிஎஸ் கருவியுடன் மீட்டரை பொருத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #TamilNadu

சென்னை:

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ்.கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2013- ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் படி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே, இந்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். #HighCourt #TamilNadu

Tags:    

Similar News