செய்திகள்

திருவாடானை அருகே கறுப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

Published On 2019-03-06 16:11 GMT   |   Update On 2019-03-06 16:11 GMT
திருவாடானை தாலுகா விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் கடந்த மூன்று வருடமாக போதிய பருவமழை இல்லததால் விவசாயம் பொய்த்து கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வந்த நிலையில் 2016-17-ம் வருடத்திற்கு நிலுவைத் தொகை உள்ள நிலையில் 2017-18-ம் வருடத்திற்கு இதுநாள் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது.

விவசாயிகள் பல முறை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிற நிலையில் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுநாள்வரை வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆத்திரமுற்ற ஆண்டாவூரணி கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் தலைமையில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் பழங்குளம் ஊராட்சி கிராம மக்கள் பயிர்காப்பீடு வழங்காதை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புற்க்கணிக்க போவதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதனால் இந்த பகுதிகளில் சிக்கல் நீடித்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News