செய்திகள்

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்

Published On 2019-02-24 04:34 GMT   |   Update On 2019-02-24 04:34 GMT
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். #Modi #Jayalalithaa
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும்; அவர் கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்துள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News