செய்திகள்

பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளை - சுடுகாட்டில் பதுக்கிய மேலும் 1 கிலோ நகைகள் மீட்பு

Published On 2019-02-23 17:27 GMT   |   Update On 2019-02-23 17:27 GMT
கோவையில் பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளையடித்த 1 கிலோ நகைகளை கொள்ளை கும்பல் சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கோவை:

கோவையில் பார்சல் நிறுவன ஊழியர் பிருத்வி சிங் என்பவரை தாக்கி ரூ.1½ கோடி மதிப்புள்ளதங்கம், வைர நகைகள் கொள்ளையடித்த வழக்கில் பார்சல் நிறுவன பெண் ஊழியர் பிரவீனா(35), அவரது கணவர் தினகரன் (37) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை தனித்தனியாக பங்கு வைத்துக் கொண்டதும், அதில் பெரும்பாலானவற்றை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பிரவீனாவின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று நகைகளை மீட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தொண்டா முத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சுமார் 1 கிலோ நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரிய வந்தது. அந்த நகைகளை நேற்று நள்ளிரவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இன்னும் சிறிய அளவிலான வைர நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News