செய்திகள்

சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2019-02-02 08:11 GMT   |   Update On 2019-02-02 08:11 GMT
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #EdappadiPalaniswami
சேலம்:

சேலம் கந்தம்பட்டியில் நடந்த புதிய பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள், சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் போன்றவை எந்த நிலையில் உள்ளது? மற்றும் எவ்வாறு நடைபெற்று வருகிறது? என அதிகாரிகளிடம் கேட்டார்.

அப்போது ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கமாக கூறினர்.


இதையடுத்து முதல்-அமைச்சர் இந்த பணிகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், நலத்திட்டங்களுக்கான அனைத்து வசதிகளும் அரசு சார்பில் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி மற்றும் வருவாய் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News