செய்திகள்

பிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-01-18 21:08 GMT   |   Update On 2019-01-18 21:08 GMT
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கித்தரும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PMModi #ponradhakrishnan
ஆலந்தூர்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் அதிக ஓட்டுகள் மேற்கு வங்காளத்திலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலும் ஏராளமான ஓட்டுகள் இருப்பதால் அதனை பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவுக்கு சென்று இருப்பார்.

ஒரு தொகுதியை விட்டால் மற்றொரு தொகுதிக்கு எட்டாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இமயத்தை மோதப்போகிறோம் என்று சொல்லி யாராவது வந்தால் எப்படி இருக்கும். அதுபோல்தான் நிகழப்போகிறது. அது மகா கூட்டணி கிடையாது. துண்டு கலவைகள் கொண்டது.

பிரதமர் மோடி 27-ந் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் மீது அளவற்ற பற்றும், பாசமும் வைத்துள்ள பிரதமரின் வருகை, தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கித்தரும். தமிழகத்தை பின் நோக்கி இழுத்து செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பிரதமர் வரும்போது கருப்பு கொடி காட்டுவார்கள்.



தமிழகத்தில் ராணுவ பூங்கா உருவாக்க வந்தபோது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ரூ.1,500 கோடியில் ஏழை, எளிய மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கி இருக்கும் பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அது தமிழகத்துக்கு துரோகம் செய்யும் கூட்டம் பெருகிக்கொண்டு இருக்கிறது என்பதை அடையாளம் காட்டும்.

எந்த கட்சியுடனும் பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. மத்திய மந்திரி பியூஸ் கோயல் 20 அல்லது 22-ந் தேதி வருவார். அப்போது தேர்தல் சம்பந்தமாக விவாதிப்பார். இவ்வாறு அவர் கூறினார். #PMModi #PonRadhakrishnan
Tags:    

Similar News