செய்திகள்

கரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-07 17:39 GMT   |   Update On 2018-12-07 17:39 GMT
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உபைதுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கமர்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபர் மசூதி இடிப்பு பற்றியும், அந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி குறித்து பிரதமர் நாட்டுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டிக்கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பக்ருதீன், குளித்தலை நகர செயலாளர் லியாகத்அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News