செய்திகள்

தாடிக்கொம்பு பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு

Published On 2018-12-01 09:54 GMT   |   Update On 2018-12-01 09:54 GMT
தாடிக்கொம்பு பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. அரசு அலுவலர்கள், விவசாயிகள் என பலர் இப்பகுதியில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.

அந்த 2 தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. தனியார் வங்கி சார்பில் 1 ஏ.டி.எம். மையம் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் தனியார் வங்கி ஏ.டி.எம்.முறையாக இயங்கி வருகிறது. ஆனால் தேசியமயமாக்கப்பட் வங்கி ஏ.டி.எம்.களில் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. இதுமட்டுமின்றி சில நேரங்களில் மிஷின்கள் இயங்குவதில்லை.

இதனால் மாத தொடக்கத்தில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் திண்டுக்கல் வந்து பணம் எடுத்து செல்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலும் ஊழியர்கள் பயன் படுத்துவதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களில் நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News