search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாடிக்கொம்பு"

    தாடிக்கொம்பு பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. அரசு அலுவலர்கள், விவசாயிகள் என பலர் இப்பகுதியில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.

    அந்த 2 தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. தனியார் வங்கி சார்பில் 1 ஏ.டி.எம். மையம் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் தனியார் வங்கி ஏ.டி.எம்.முறையாக இயங்கி வருகிறது. ஆனால் தேசியமயமாக்கப்பட் வங்கி ஏ.டி.எம்.களில் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. இதுமட்டுமின்றி சில நேரங்களில் மிஷின்கள் இயங்குவதில்லை.

    இதனால் மாத தொடக்கத்தில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் திண்டுக்கல் வந்து பணம் எடுத்து செல்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலும் ஊழியர்கள் பயன் படுத்துவதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களில் நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தாடிக்கொம்பு பகுதியில் குடகனாற்றில் மணல் கடத்தப்பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு பகுதியில் ஆறு, குளம், நீரோடைகளில் மணல் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    விவசாயிகளுக்காக அரசு சார்பில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சில கும்பல் ஜே.சி.பி. மூலம் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருகிறது. இதனால் நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இப்பகுதியில் லாரிகளில் அதிகளவில் உரிமம் இல்லாமல் மணல் அள்ளிச் செல்கின்றனர். அதிகாரிகளும் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.

    தாடிக்கொம்பு பகுதியில் உள்ள குடகனாற்றில் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. ஆர்.டி.ஓ. ஜீவா தலைமையில் அலுவலர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது டிராக்டரில் ஒருவர் மணலை அள்ளிக் கொண்டு வந்தார். அதிகாரிகளைக் கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    ×