செய்திகள்

கார்த்திகை தீப திருநாளையொட்டி சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-11-22 03:13 GMT   |   Update On 2018-11-22 03:13 GMT
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
சென்னை:

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூர் கன்டோன்மெண்ட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் வேலூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.20 மணிக்கு சென்றடையும்.



மறுமார்க்கமாக திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மெண்ட் இடையே 23 மற்றும் 24-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, வேலூரை காலை 5.55 மணிக்கு சென்றடையும்.

இந்த பயணிகள் ரெயில் கன்னியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும்.

சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் இடையே இன்றும், நாளையும், மறுமார்க்கமாக 23 மற்றும் 24-ந்தேதிகளில் சிறப்பு பயணிகள் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KarthigaiDeepam #ArunachaleswararTemple

Tags:    

Similar News