செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-11-13 18:05 GMT   |   Update On 2018-11-13 18:05 GMT
காவேரிப்பட்டணத்தில் தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கம் மற்றும் காவல் துறை சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தில் தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கம் மற்றும் காவல் துறை சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்ராஜூலு தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கோபு, இந்திய ராணுவத்தின் ஹவில்தார் குளோரியா, பாரத சாரணர் சங்க ஒன்றிய செயலர் பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படை, இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு கமலநாதன், உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன், அண்ணாதுரை, ராகவன், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News