செய்திகள்

சேப்பாக்கம் மைதானம் அருகே அன்பளிப்பு டிக்கெட்டுகளை விற்ற 8 பேர் சிக்கினர்

Published On 2018-11-12 07:06 GMT   |   Update On 2018-11-12 07:45 GMT
கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். #INDvWI #WIvIND #chennaichepaukstadium
சென்னை:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி 20 ஒவர் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெங்களூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போக்குவரத்து போலீஸ்காரர் முத்துவே இந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்ய சொன்னார் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளையும் சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அன்பளிப்பு டிக்கெட்டுகளை வாலிபர்கள் சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது போன்று 8 பேர் பிடிபட்டனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். தங்களுக்கு கிடைத்த அன்பளிப்பு டிக்கெட்டுகளையே இவர்கள் விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. #INDvWI #WIvIND #chennaichepaukstadium
Tags:    

Similar News