செய்திகள்

கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம்- அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Published On 2018-11-01 10:20 GMT   |   Update On 2018-11-01 10:20 GMT
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாயமான சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது. #MadrasHC #KapaleeswararTempleIdol
சென்னை:

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த சிலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து அறநிலையத் துறையின் கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.

ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் புகார் நிரூபணமானால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.  #MadrasHC #KapaleeswararTempleIdol
Tags:    

Similar News