செய்திகள்

மருதூர் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்

Published On 2018-10-23 14:41 GMT   |   Update On 2018-10-23 14:41 GMT
மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார்.
முசிறி:

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பற்றி நேரில் கேட்டறிந்தும், வீடுகளில் பயன்படுத்தபடும் நீர் தொட்டிகள் ,நீர் உருளைகள் குளிர் சாதன பெட்டிகள், அரவை கற்கள், நீர் தேங்கும் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும் பொது நீர்தேக்க தொட்டிகளையும் பார்வையிட்டார். பின்பு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், முதல் நிலை உதவியாளர் சேட்டு, மேஸ்திரி , மஸ்தூர் பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உடனிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News