search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி ஆய்வு"

    • கற்போர் மையங்களில் 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர்.
    • 766 தன்னார்வலர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 766 கற்போர் மையங்களில் 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 766 தன்னார்வ லர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.

    இந்த கற்போர் மையங்களை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் குமார் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை இன்று தருமபுரி ஒன்றியம் கே. ஆலங்கரை மற்றும் பலர் மரத்துக்கொட்டாய் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது இணை இயக்குநர் அவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தெரிந்து கொள்வதால் ஏற்படும் பயன்களை பற்றி விரிவாக கற்போரிடம் எடுத்துரைத்தார்.

    இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிக்குமார், துணை ஆய்வாளர் திரு.பொன்னுசாமி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

    • உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • பாலக்கோடு அருகே நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் , தாபாக்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
    • தரமற்ற உணவுகளை விநியோகம் செய்த ஓட்டல்கள், பேக்கரிகள் என 4 கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு:

    மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை, ஹைவே, பைபாஸ் சாலைகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், சாலை ஓரதுரித உணவகங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சுகர்மில், மாதம்பட்டி, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி மகேந்திரமங்கலம் மற்றும் ஜிட்டாண்டஅள்ளி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், சாலை ஓர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் உணவகங்களில் உரிய சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா, உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, மூலப் பொருட்கள் உரிய காலாவதி தேதி உள்ளனவா மேலும் சட்னி, தயிர், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் தரமாகவும், குடிநீர் விநியோகம், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் தேயிலை தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    சுமார் 25-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகள் ஆய்வு செய்ததில் 2 உணவகங்களில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 3 லிட்டர், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள், 2 உணவகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு மளிகை கடை மற்றும் பேக்கரியில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட வறுத்த பச்சை பட்டாணி 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    நியமன அலுவலர் அறிவுறுத்தல்படி 4 கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் வீதம் 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் ஜிட்டான்டஅள்ளியில் ஒரு டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்காரருக்கு ரூ.5ஆயிரம் உடனடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
    • ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, , குடிநீர் வசதி, , அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவானது வருகிற 2-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு தருமபுரி, சேலம் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.

    இதனால் ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, வாகன நிறுத்து மிடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    காவிரி ஆற்றில் பாதுகாப்பாக நீராடுவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன் ஆகியோர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுகளின் போது ஊராட்சி செயலர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், துணைத் தலைவர் மணி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட மராமத்து பணிகள், புதிய சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை சென்னை ஊரக வளர்ச்சி துணை ஆணையர் அருண் மணி ஆய்வு செய்தார். அப்போது மதுரை கூடுதல் கலெக்டர் சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன், ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓமலூரிலிருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் வரை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை திட்ட இயக்குனர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் சாலை பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் செல்வன், கோட்டப் பொறியாளர் சசிகுமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்களும் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடந்து வருகிறது.
    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான கே.எம்.சரயு மற்றும் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகளை ஆய்வு செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ண கிரி மாவட்டத்திற்கென மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடந்து வருகிறது.

    இந்த பணியை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராகேஷ்குமார், சார்பு செயலாளர் ரித்தீஷ்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான கே.எம்.சரயு மற்றும் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவநந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) ஜெய்சங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மேம்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் மனோகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இதை அடுத்து அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சந்தை மேம்படுத்தும் பணிக்கு ரூ.2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதை அடுத்து சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாடு சந்தை நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ், மாதப்பன், சக்திரமேஷ், பிரியாசங்கர், உதவி பொறியாளர் முருகன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், பொடங்கம் கிராமம், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு கீழ்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணியினையும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    • வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு ஆரணி வட்டாரக்கல்வி அலுவலர் அருணகிரி திடீர் ஆய்வு செய்தார்.

    பள்ளி வளாகம், வகுப்பறை வண்ணம் தீட்டுதல் பள்ளியின் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டார்.

    இதில் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
    • புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.

    கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார். 

    ×