search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
    X

    சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்த காட்சி.

    சேலம் அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது.
    • மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

    அந்த நிதியின் மூலம் அச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிறைந்த இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்தும், பல்வேறு இடங்களில் பழுது நீக்கியும் சீரமைத்தனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், சாலையை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர், சாலையை அகலப்படுத்திய இடத்தை பார்வையிட்டு அதன் தரத்தையும், தளத்தின் அளவுகளையும் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து, சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×