search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அதிகாரி ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அதிகாரி ஆய்வு

    • கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
    • விரைவாக பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேற்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள மக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடும் 10 மனுக்களின் பணிகளை தனி கவனம் செலுத்தி அவற்றினை நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செயல்படுத்தி வரும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும், அப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள் நிலுவைகள் குறித்தும், நேரடியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் வி.சம்பத் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் மற்றும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் உணவின் தரம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களின் கருத்துக்கள் குறித்தும் கிடைக்கப்பெறுகிறதா என கேட்டு அறிந்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை மேலும் பள்ளிகளுக்கு விரிவு படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆகவே இத்திட்டம் முறையாக செல்வதை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்தும், அதில் புதிதாக சேர்க்கைகள் சேர்ப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை தரிசனம் மேம்பாட்டு திட்டங்கள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். வங்கியின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுவதும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள வங்கிகள் அதனை உடனடியாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

    நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தங்கள் தொகுதியின் முக்கிய பத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்திட அதற்கான திட்ட அறிக்கையினை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி அதனை நிறைவேற்றிட மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருடன் நேரடியாக விவரங்களை கேட்டு அறிந்து வருகின்றனர். ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கைகளை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் நேரடியாக கண்காணித்து அதற்கான ஆய்வு பணிகளையும் அதனை நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதில் எவ்வித தொய்வு இருக்கக் கூடாது விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குநர் வேளாண்மை வடமலை, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×