search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு
    X

    பரமக்குடி யூனியன் அரியனேந்தல் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச் செயலாளர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உள்ளார்.

    மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு

    • மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக அதிகாரி ஆய்வு நடத்தினர்.
    • கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவ மனையை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தேவையான சிகிச்சை முறைகளை கையாண்டு கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க மருத்து வர்கள் கண்காணிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மருச்சுக்கட்டி ஊராட்சி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பொதுமக்களிடம் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிவறை கட்டிடம் கட்டி வழங்கப்படுகிறது. கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் ஆய்வகம் உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள தானிய பொருட்களை இருப்பு வைத்துள்ளதை பார்வையிட்டார். அரிய னேந்தல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடுகள் அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை நடத்தி னார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×