search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படும் வன சாலைகள்
    X

    நீண்ட நாட்களாக சேமடைந்து கிடக்கும் சாத்தையாறு அணையை ஒட்டியுள்ள சாலை.

    பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படும் வன சாலைகள்

    • வாடிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக வன சாலைகள் சீர்குலைந்து காணப்படுகின்றன.
    • மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி வழியாக பாலமேடு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இதில் சாத்தையாறு அணை மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி யையொட்டி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது.

    அந்த சாலை பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வாடிக்கையாகி வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட வன அலுவலர் குருசாமி தாபாலா, வனச்சரக அலுவலர் வெங்கடேசன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.

    மேலும் பல கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட குட்லாடம்பட்டி அருவி 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சீர்குலைந்ததில் அருவிக்கு செல்லும் பாதைகள் படிக்கட்டுகள் சேதமடைந்து புதர்மண்டி இருப்பதை பார்க்காமலும், விராலிப்பட்டியில் இருந்து சிறுமலை மீனாட்சிபுரத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை தொடங்கும் இடம் பற்றி புரிதல் இல்லாமல் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமாலும் அதிகாரிகள் வந்து சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    Next Story
    ×