search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீடு கட்டப்படும் இடத்தை அதிகாரி ஆய்வு
    X

    வீடு கட்டப்படும் இடத்தை அதிகாரி ஆய்வு

    • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டித்தரப்படுகிறது
    • தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உடன் ெசன்றனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த வேப்பேரி, சிறுநமல்லி, நாகவேடுபோன்ற கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் வறுமை கோட்டிற்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

    அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட இடத்தை வருவாய் துறை அதிகாரிகளால் தேர்ந்தேடுக்கப்பட்டு நேற்று அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா நேரில் சென்று இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுந்தரம், விஏஒ தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×