செய்திகள்

134 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2018-10-21 10:23 GMT   |   Update On 2018-10-21 10:23 GMT
நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடர்ந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது.
கூடலூர்:

கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2629 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 193 கன அடியாக உயர்ந்துள்ளது. 57 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 53.75 அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு 168 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 20.4, தேக்கடி 24.6, கூடலூர் 13.4, சண்முகாநதி அணை 21, உத்தமபாளையம் 17.4, வீரபாண்டி 50, மஞ்சளாறு 105, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News