செய்திகள்

தே.மு.தி.க. பொருளாளராக பிரேமலதா நியமனம்

Published On 2018-10-19 11:23 GMT   |   Update On 2018-10-19 12:44 GMT
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்றது, இதில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK

சென்னை:

கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா, மாநில நிர்வாகிகள் மோகன்ராஜ், பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவேன், மாவட்ட செயலாளர்கள் தினகர், அனகை முருகேசன், மதிவாணன். பிரபு, ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சிலரது பொறுப்புகளை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்த டாக்டர் இளங்கோவன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்தும், அவைத் தலைவராக இருந்து வந்த அழகாபுரம் மோகன்ராஜ் கொள்கைபரப்பு செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பா.ஜ.க., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பிரேம லதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரேமலதா இதுவரை கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் கட்சி பொதுக் கூட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK

Tags:    

Similar News