செய்திகள்

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடிய 2 பேர் கைது

Published On 2018-10-14 17:08 GMT   |   Update On 2018-10-14 17:08 GMT
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி வனப் பகுதியில் வனவிலங் குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வனசரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனசரக அலுவலர் நாகேஷ் தலைமையில் வனவர்கள் ராஜேந்திரன், சம்பத்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் கங்கை அமரன், சிவகுமார், நாராயணன், கோவிந்தசாமி ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பந்தாரப்பள்ளி கிராமம் அருகே வனப்பகுதியில் இருந்து 8 முயல்கள், 25 கவுதாரி பறவைகளை வேட்டையாடிய 2 பேரை கையும் களமாக வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த காவேரி (வயது44), அவரது மனைவி முத்தம்மா (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News