செய்திகள்

சிவகாசியில் ஆவின் பொருட்கள் விற்பனை நிலையம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

Published On 2018-10-12 12:35 GMT   |   Update On 2018-10-12 12:35 GMT
சிவகாசி அருகே ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். #Ministerrajendrabalaji

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பால்வளத் துறை நிர்வாகம் மேற் கொண்டுள்ளது.

அதன்படி விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

சிவகாசியில் சில மாதங்களுக்கு முன்பு அண்ணா காய்கறி மார்க்கெட், கார் நிறுத்தம், கார னேசன் காலனி, அம்பேத் கார் சிலை, பேராபட்டி, பஸ் நிலையம், சாட்சியாபுரம், ரிசர்வ்லயன் உட்பட பல்வேறு இடங்களில் ஆவின் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சிவகாசி ஜக்கம்மாள் கோவில் அருகே ஆவின் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு ஆவின் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி, சிவகாசி நகர செயலாளர் அசன்பதுரூதீன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட தகவல் தொழிற்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Ministerrajendrabalaji

Tags:    

Similar News