செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் கடற்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்து

Published On 2018-10-01 06:08 GMT   |   Update On 2018-10-01 08:13 GMT
அரக்கோணத்தில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. #HelicopterCrashed
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் ராஜாளி இந்திய விமான படைத்தளம் உள்ளது.

இங்கு இந்திய விமான படைக்கு சொந்தமான நவீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன. விமானங்கள், ஹெலிகாப்டர்களில் விமானபடை வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இன்று காலை சேத்தக் ரக ஹெலிகாப்டரில் பறந்து விமானபடை வீரர்கள் பயிற்சி செய்தனர். பயிற்சி, முடிந்ததும் படை தளத்திற்குள் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானபடை வீரர்கள் அதனை லாவகமாக தரையிறக்கினர். ஆனாலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அரக்கோணம் தாசில்தார் பாபு, டி.எஸ்.பி. குத்தாலிங்கம், ராஜாளி கடற்படைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்திய விமானபடை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #HelicopterCrashed
Tags:    

Similar News